டயானா மரியம் குரியன், ரம்லத், பிரபு தேவா: செக்யூலரிஸம் அரிக்கிறது!

டயானா மரியம் குரியன், ரம்லத், பிரபு தேவா: செக்யூலரிஸம் அரிக்கிறது!

இந்து-முஸ்லீம்-கிருத்தவக் கூட்டணி: பிரபுதேவாவை திருமணம் செய்ய நயன்தாரா, அதாவது டயானா மரியம் குரியன் என்ற கிருத்துவர் இந்து மதத்துக்கு மாறுகிறார்! பிரபுதேவா முன்பு ரம்லத் என்ற முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டபோது, அவர் தான் இந்துவாக மதம் மாறி, லதா என்ற பெயரை வைத்துக் கொண்டாராம். தற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் அண்ணா நகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபு தேவா தங்குகிறார் எனப்படுகிறது. பாவம், இப்பொழுது லதாவை விட்டுவிட்டு நயந்தாரவிடம் ஐக்கியம் ஆகிவிட்டாராம்!

May 28, 2010

http://www.alaikal.com/news/?p=39118

வன்மை முஸ்லீம் மனைவியும், காமக் கிருத்துவக் காதல்-மனைவியும்: பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இருவரையும் பிரிக்க பிரபுதேவா மனைவி ரம்லத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. நயன்தாராவை அடிப்பேன் என்று மிரட்டினார். கணவரை விட்டு விலகும்படி செல்போனில் எஸ்.எம்.எஸ்.களும் தொடர்ந்து அனுப்பினார். பிரபு தேவாவிடமும் காதலை முறிக்கும்படி வற்புறுத்தினார். எதுவும் பலிக்கவில்லை. மாறாக நெருக்கத்தை இருவரும் தீவிரமாக்கினர்.

காமத்திலும் திரியேகத்துவம்: பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்றார்கள். ஐதராபாத்தில் நடந்த படவிழாவுக்கு கைகோர்த்தப்படி வந்தனர். சென்னையில் ஒரே மேடையில் சேர்ந்து நடனம் ஆடி தொடர்பை வெளிப்படுத்தினார்கள். ரம்லத் சோர்வாகிவிட்டார். அடுத்தக்கட்டமாக இருவரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். தற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் அண்ணா நகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபு தேவா தங்குகிறார். நயன்தாராவுடனான சந்திப்புகள் நட்சத்திர ஓட்டல்களிலேயே நடக்கிறது. அவருக்கு சென்னையில் வீடு பார்த்து தங்க வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக புரோக்கர்கள் மூலம் வீடு தேடிவருகிறார். ஐதராபாத்திலும் வீடு தேடுகிறார்.

ஆர். எஸ்.எஸ் செய்யாததை பிரபுதேவா செய்திருக்கிறார்! பிரபுதேவாவுக்காக மதம்மாற நயன்தாரா முடிவு செய்துள்ளார். இவரது சொந்த பெயர் டயானா மரியம் குரியன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் வைத்துக் கொண்டார். பிரபுதேவா மனைவி ரம்லத் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். திருமணத்துக்கு பிறகு அவர் இந்து மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் லதா என மாற்றிக்கொண்டார். அதுபோல் நயன்தாராவும் இந்து மதத்துக்கு மாறி பிரபுதேவாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். இப்போதே படப்பிடிப்புகளின்போது அந்தந்த பகுதிகளில் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா, மதம் மாறவேண்டாம் என்று கூறினாராம். ஆனால் நயன்தாரா கேட்கவில்லை. காதலின் ஆழத்தை வெளிப்படுத்த மதம் மாறுவதில் உறுதியாக இருக்கிறாராம்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “டயானா மரியம் குரியன், ரம்லத், பிரபு தேவா: செக்யூலரிஸம் அரிக்கிறது!”

 1. vedaprakash Says:

  காதலின் ஆழம் காட்ட மதம் மாறும் நயன்!
  வெள்ளிக்கிழமை, மே 28, 2010, 11:10[IST]
  http://thatstamil.oneindia.in/movies/gossip/2010/05/28-nayan-convert-hindu-prabhu-deva-ramalath.html

  பிரபுதேவா மீதான காதலின் ஆழத்தை வெளிப்படுத்த மதம் மாறத் தீர்மானித்துள்ளார் நயன்தாரா.

  நயன்தாராவின் சொந்தப் பெயர் டயானா மரியம் குரியன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் வைத்துக் கொண்டார். இப்போது நயன்தாரா என்ற பெயரையே நிரந்தரப் பெயராக மாற்றிக் கொள்ளப் போகிறாராம்.

  தன்னை விட்டு ஒரு கணமும் பிரியமாட்டேன் என்று பிரபுதேவா பஞ்சாயத்தாரிடம் உறுதியாகக் கூறியதில் நெகிழ்ந்துபோன நயன்தாரா, உடனே மதம் மாறி திருமணம் செய்து கொண்டு கள்ளக் காதலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பிரபுதேவாவிடம் கூறினாராம்.

  ஆனால், ரம்லத் கோர்ட்டுக்குப் போனால் கம்பி எண்ண வேண்டிய நிலை இருப்பதால், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தனது குடும்பத்தினரையே ஈடுபடுத்தியுள்ளாராம்.

  பிரபுதேவாவின் தந்தை சுந்தரமும் இந்தக் காதலை ஒப்புக் கொண்டு திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டார் என்கிறது பிரபுதேவா தரப்பு. எனவே பிரச்சினை சரியான பிறகு நயன்தாராவை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளாராம் பிரபுதேவா.

  தற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் ரம்லத்துடனும் பிரபு தேவா தங்குகிறார். நயன்தாராவை சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்க வைக்க தனி வீடும் பார்த்து வருகிறாராம்.

 2. செக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து – பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளு Says:

  […] [1]https://secularsim.wordpress.com/2010/05/28/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: