இந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்!

இந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும்  குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்!
முதலிடம் பின்லாடன், மூன்றாமிடம் தாவூத் இப்ராகிம்
மே 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7568

Front page news and headlines today

நியூயார்க் :  உலகின் தேடப்படும்  குற்றவாளிகள் பட்டியலில், முதல் 10 பேர்களில் முதலிடத்தில் பின்லாடனும், மூன்றாமிடத்தில் இந்தியாவின் தாவூத் இப்ராகிமும் இருப்பதாக  ‘போர்ப்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

‘போர்ப்ஸ்’ பத்திரிகை கடந்த 2008ல் வெளியிட்ட அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், ‘டாப்-10’ல் முதலிடத்தில் ஒசாமா பின்லாடனும், இரண்டாமிடத்தில் மெக்சிகோவின் போதை கடத்தல் மன்னன் ஜோவாகின் குஜ்மேன் என்பவரும் இருப்பதாக கூறியிருந்தது. இப்போது அப்பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இவர்கள் இருவரும் அதே இடத்தில் உள்ளனர். ஆனால் முன்பு நான்காமிடத்தில் இருந்த, 1993ல் மும்பையில் நடந்த தாக்குதலோடு தொடர்புடைய தாதா தாவூத் இப்ராகிம், இப்போது மூன்றாமிடம் பிடித்துள்ளார் .தாவூத், தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது.

‘கராச்சியில் ஐந்தாயிரம் பேர் கொண்ட டி-கம்பெனி என்ற நிறுவனத்தை தாவூத் நடத்தி வருகிறார். கொலை, கடத்தல் போன்ற கொடூர செயல்களை இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும், ஒப்பந்த முறையில் இந்நிறுவனம் செய்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத இயக்கங்களோடும், உளவு நிறுவனங்களோடும் டி-கம்பெனிக்கு தொடர்பு இருக்கிறது’ என்று தாவூத்தின் பின்புலம் குறித்து ‘போர்ப்ஸ்’  பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., அதிகாரியான ஹெக்டர் கான்சலேஸ் இதுகுறித்து கூறுகையில்,’இந்த குற்றவாளிகள் அனைவரும் அரசாங்கங்களின் பாதுகாப்பில் மறைந்துள்ளனர். இந்த உலகம் சுருங்கி விட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் உலகமயமாக்கல் வந்து விட்டது போல, குற்றச்செயல்களிலும் உலகமயமாக்கல் வந்து விட்டது’ என்று தெரிவித்தார்.கடந்த 2008ல் அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளிவந்ததிலிருந்து, அதிலிருந்த ஒருவர் கூட இன்னும் பிடிக்கப்படவில்லை என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “இந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்!”

 1. vedaprakash Says:

  அப்சல் குரு, கசாப்பை ஒன்றாக தூக்கிலிட பிட்டா கோரிக்கை
  மே 18,2010,00:00 IST

  http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25153

  புதுடில்லி : ”பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவையும், மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பையும் ஒன்றாக தூக்கிலிட வேண்டும்,” என, பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் எம்.எஸ்.பிட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.

  கடந்த 2001 டிச., 13ம் தேதி பார்லிமென்ட் மீது தாக்குதல் நடந்த போது, பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிட்டு உயிர் நீத்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் எம்.எஸ்.பிட்டாவும் கூறியுள்ளதாவது: கசாப் மற்றும் அப்சல் குரு வழக்குகளை கையாள்வதில், மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருந்தும், இதுவரை அவனை தூக்கிலிடவில்லை. அதே நேரத்தில், கசாபிற்கு மரண தண்டனை விதிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது பற்றி, அரசும், சட்ட அமைச்சரும் பேசுகின்றனர். கசாப் பாகிஸ்தானி என்பதால், இந்த அவசரம் காட்டப்படுகிறது. அப்சல் குரு இந்தியர் என்பதாலும், முஸ்லிம் என்பதாலும், அவனின் மரண தண்டனை விஷயத்தில் மத்திய அரசு அக்கறை காட்டுவதில்லை. அப்சல் குருவை தூக்கிலிட்டால், மும்பையில் ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என, அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. இதுபோன்ற ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடுவதை கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

  பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவையும், மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பையும் ஒன்றாக தூக்கிலிட வேண்டும். நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் உறுதியாக உள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன், இவர் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், அப்சல் குரு எப்போதோ தூக்கிலிடப்பட்டிருப்பான். பயங்கரவாதமும் நாட்டிலிருந்து அகற்றப்பட்டிருக்கும். இவ்வாறு பிட்டாவும், மற்றவர்களும் கூறினர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: