கசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம்! – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்

கசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம்! – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்: ஒட்டுமொத்தமாக, எல்லொருக்கும் அந்த குரூரக்கொலை-குண்டு வெடுப்புத் தீவிரவாதிகள் தூக்கிலிடப்படவேண்டும் என்று உறுதியாக இருக்கும் நிலையில், தீடீரென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா, “அவனைத் தூக்கில் போட வேண்டாம்!” என்று ஆரம்பித்து விட்டது[1]. பிறகெதற்கு 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர், என்றெல்லாம் சொல்லவேண்டும்? ஏதோ செத்துவிட்டார்கள் என்று மெழுகு வர்த்தி எரித்து, ஊர்வலம் வந்து, டிவிக்களில் காட்டி, விவாதங்கள் நடத்தில் நேரத்தைக் கழித்து விடலாமே?

கோட்ஸேவும், கசாப்பும், இந்திய சித்தாந்தவாதிகளும்: மஹாத்மாவைக் கொன்றவன் கோட்ஸே, அவன் தூக்கிலிடப்பட்டான். அப்பொழுது, நேரு போன்ற செக்யூலரிஸவாதிகள் கூட, “அவனைத் தூக்கில் போடவேண்டாம், அவனை தூக்கில் போடுவதால், போன உயிர் திரும்ப வந்துவிடுமா“, என்றெல்லாம் அறிவிஜீவித்தனமான தத்துவங்கள் பேசவில்லை. ஆனால், இந்த கசாப்புக்கடைக்காரனைவிட குரூரமான கசாப்பின் விஷயத்திக்ல் இப்படி பேசுவது ஏன்? எது அவர்களை அப்படி நினைக்க வைக்கிறது, மனது, ஏற்று அத்தகையக் கருத்துகளை முன்வைக்கிறது? ஊடகங்களிலும் பெருமையாக தலைப்புச் செய்திகளாகப் போட்டு, விவாதிக்கப் படுகிறது?

ஃபஹிம் அன்சாரியின் மனைவி, மகிழ்ச்சியில் திளைத்தாள்!: ஃபஹிம் அன்சாரி மற்றும் சஹாப்புத்தீன் அஹமத் மீதான கூற்றங்கள் நிரூபிக்கப் படும் வகையில் போலீஸாரால், பலமான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை, ஆகையால்அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது, என்று தஹல்யானி நீதிபதி கூறினாராம். கேட்டவுடன், தன் காதுகளையே நம்ப முடியவில்லையாம், ஃபஹிம் அன்சாரியின் மனைவி யாஸ்மி[2], மகிழ்ச்சியில் திளைத்தாளாம், கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியதாம்!

பிறகு அந்த உயிரிழந்த 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர்,. காயமடைந்த 304 பேர்களுடைய மனை-மக்கள் ஏன் சந்தோஷப்படவில்லை? அந்த செத்தவர்கள் எல்லாம் யார்? அவர்களுடைய மனை-மக்கள் நிலை என்ன? அவர்கள் சொல்வது என்ன? ஏன் அவர்களுடைய படங்கள், பேச்சுகள் முதலியவை இடம் பெறவில்லை?

இப்படி திசைத் திருப்பும் நோக்கம் என்ன? “மைனாரிட்டி”, “மைனாரிட்டு வோட் பேங்க்” …………….என்று இப்பொழுதே ஆரம்பித்து விட்டனர்[3]. என்.டி.டி.வி போன்ற கேடு கெட்ட ஐந்தாம் படைகள், கசாப் ஒரு வீரன் போன்று காட்டி வருகிறது. அவன் ஆடுவது, பாடுவது போன்று சித்தரிக்கப் படுகிறது. முன்பே, “அவன் பால் கொடுக்கும் சிறுவனல்லாவோ, அவன் அம்மாதிரியெல்லாம் செய்திருக்க முடியுமோ“, என்பது போல, அவன் ஒரு சிறுவன் என்றெல்லாம் நாடகமாடினர். ஆனால், அவனோ எனக்கு சென்ட் வேண்டும், உலாவ வேண்டும் என்று சொகுசாக வாழ்க்கை நடத்தினான். கோடிகள் கொட்டி அரசாங்கமும் வசதி செய்து கொடுத்தது.

கசாப்பின் தாயார் இந்தியாவிற்கு வர அனுமதிப்பார்களா? இப்படியும் இனி விவாதங்கள் வரப்போகின்றன. என் மகனை பார்க்க வேண்டும் என்றால், அரசு அனுமதித்து தான் வேண்டும் என்று வாதிட கிளம்பி விடுவர். இல்லை, சில தாராள பேர்வழிகள், கட்சிகள், அவர் இந்தியா வந்து செல்ல ஆகும் செலவையெல்லாம் நாங்களே செய்து தருகிறோம் என்றெல்லாம் கூப்பாடுப் போடுவர்.


[1] http://timesofindia.indiatimes.com/NEWS/City/Hyderabad/Kasab-should-not-be-hanged/articleshow/5887870.cms

[2] http://www.deccanherald.com/content/67380/tears-joy-fahims-wife.html

[3] Do you think Ajmal Kasab will get death penalty? , http://www.merinews.com/article/do-you-think-ajmal-kasab-will-get-death-penalty/15805892.shtml

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “கசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம்! – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்”

 1. vedaprakash Says:

  மும்பை தாக்குதல் வழக்கின் பின்னணி
  மே 04,2010,00:00 IST
  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7415

  உலகமே எதிர்பார்த்த, மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், முக்கிய குற்றவாளியான கசாப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.கடந்த 2008 நவ., 26ல் மும்பையை அதிரவைத்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை, 2009 ஏப்ரல் 15ல் துவங்கியது.

  சம்பவத்தின் போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப் மீதும், இச்சதி திட்டத்தில் பங்கேற்றதாக குற்றம்சாட்டப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்தியர்களான பாகிம் அன்சாரி மற்றும் சகாபுதீன் அகமது ஆகியோர் மீதான விசாரணை துவங்கியது.இவ்வழக்கின் சிறப்பு நீதிபதி எம்.எல். தகிலியானி வழக்கை விசாரிக்க சிறையில் பிரத்யேக நீதிமன்றம் அமைக்கப்பட்டது.கசாப்பின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவருக்கென பிரத்யேக செல் அமைக்கப்பட்டது. குண்டுவீசி தாக்குதல் நடத்தினாலும், செல்லுக்கு ஏதும் பாதிப்பு வராத வகையில் பல அடுக்கு கான்கிரீட் சுவர்களுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.அரசு தரப்பு வக்கீலாக உஜ்வால் நிகாம் நியமிக்கப்பட்டார். இவ்வழக்கில் கசாப் சார்பில் ஆஜராக வக்கீல்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. சட்ட உதவி மையம் வழியாக அவருக்கு சட்ட உதவி அளிக்க கோரப்பட்டது. இதற்கிடையில் அஞ்சலி வாக்மர் எனும் வக்கீல், கசாப்புக்கு ஆதரவாக வாதாட நியமிக்கப்பட்டார். ஆனால், பயங்கரவாத சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் சார்பிலும் வாதாடியதால், இவ்வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.அவருக்கு பின், அப்பாஸ் காஸ்மி என்பவர் கசாப் வக்கீலானார்.

  இவர் வழக்கை எடுத்த பின், அந்த வழக்கு சூடுபிடித்தது. தாக்குதல் சம்பவம் நடந்த போது, கசாப் மைனராக இருந்தார். ஆகவே சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், மருத்துவப் பரிசோதனையின் போது, தாக்குதல் சம்பவம் நடந்த போது, கசாப் மேஜர் தான் என்பது நிரூபணம் ஆனது.இவ்வழக்கின் போது ஏற்படும் ஒவ்வொரு கட்டப் பிரச்னையும் சர்வதேச அளவில் செய்திகளாயின. ஒரு முறை கசாப் விசாரணையின் போது, வயிற்று வலியால் மயங்கி விழுந்தார். அப்போது அணிந்து கொள்ள புதிய உடையை கேட்டார். ஜெயிலில் வழங்கப்படும் உணவு பற்றியும் புகார் தெரிவித்தார்.சோப், பெர்பியூம், செய்தித்தாள்கள், தொழுகை நடத்த அனுமதி உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி வழங்கக் கேட்டார்.

  சில நேரங்களில் மகிழ்ச்சி, சில நேரங்களில் சோகம், சில நேரங்களில் கண்ணீர் என்று கசாப் தன்னுடைய பரிமாணத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். கடந்த ஜூலையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட கசாப், தன்னை தூக்கிலிடுமாறு (ஹேங் மி பிளீஸ்) கூறினார். இந்த பூமியில் நான் குற்றம் புரிந்தவன். உலக மக்கள் என்னை தண்டிக்க வேண்டும். கடவுளின் தண்டனை வேண்டாம். அதே சமயம் மரண தண்டனையிலிருந்து தப்புவதற்காகத்தான் நான் குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளிப்பதாக யாராவது கருதினால் என்னை இப்போதே தூக்கிலிட்டுவிடுங்கள்’ என்று கூறினார். அதன் பின், இந்திய கோர்ட் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், சர்வதேச கோர்ட்டில் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கசாப் கூறினார்.முன்னுக்குப்பின் முரணாக நடந்து கொள்ளும் கசாப் ‘ஒரு நல்ல நடிகர்’ என்று அரசு தரப்பு வக்கீல் நிகாம் கூறினார்.விசாரணையின் போக்கை திசை திருப்புவதற்கும், தாமதப்படுத்துவதற்கும்தான் இந்த கோரிக்கை என்று கூறி நீதிபதி நிராகரித்துவிட்டார்.

  கசாப் மீது 312 குற்றச்சாட்டுகள் : மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப். இந்த வழக்கு விசாரணை தான் நாட்டிலேயே விரைவாக நடந்து முடிந்துள்ளது.
  2008, நவ., 26: பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து அஜ்மல் கசாப், மும்பை கிர்கானில் கைது.
  2009, ஜன., 13: வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக தகிலியானி நியமனம்.
  2009, பிப்., 26: கசாப் மீது 11 ஆயிரம் பக்கம் உடைய குற்றப்பத்திரிகை தாக்கல்.
  கசாப் மீது 312 குற்றங்கள் சுமத்தப்பட்டன. இதுவே, இந்தியாவில் ஒரு குற்றவாளி மீது சுமத்தப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை.
  2009, பிப்., 27: உஜ்வால் நிகாம் அரசு வக்கீலாக நியமனம்.
  2009, மார்ச் 2: மாஜிஸ்திரேட் கோர்ட்டிலிருந்து செஷன்ஸ் கோர்ட்டிற்கு வழக்கு மாற்றம்.
  2009, மார்ச் 31: கசாப் வக்கீலாக அஞ்சலி வாக்மர் நியமிக்கப் பட்டார். கசாப் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் வாக்குமூலம்.
  2009, ஏப்., 15: கசாப் சார்பில் வாதாடுவதிலிருந்து அஞ்சலி வாக்மர் நீக்கப்பட்டார். விசாரணை தள்ளி வைக்கப் பட்டது.
  2009, ஏப்., 16: கசாப்பின் புதிய வக்கீலாக அப்பாஸ் காஸ்மி நியமனம்.
  2009, ஏப்., 17: ஆர்தர் ரோடு சிறையில் விசாரணை துவங்கியது.
  2009, ஏப்., 20: கசாப் மீது 166 பேரை கொலை செய்ததாக, குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.
  2009, ஏப்., 28: உருது டைம்ஸ் நாளிதழ் உள்ளிட்ட வசதிகள் வேண்டுமென்று கசாப் தனது வக்கீல் மூலம் மாஜிஸ்திரேட்டிடம் வேண்டுகோள். சிறையில், பக்கத்து வராண்டாவில் நடந்து செல்லவும் அனுமதிக்க கசாப் கோரிக்கை.
  2009, மே 6: 86 குற்றங்கள் மீது தனக்கு தொடர்பில்லை என்று கசாப் மறுப்பு.
  2009, மே 8: கோர்ட்டில் கசாப் மீது சாட்சியங்கள் அளிக்கப்பட்டன.
  2009, மே 15: இரண்டு டாக்டர்கள் கசாப்புக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
  2009, மே 19: கசாப் போலி அடையாள அட்டை பயன்படுத்தியதாக, ஐதராபாத் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
  2009, மே 21: மும்பைத் தாக்குதல் வழக்கில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
  2009, மே 27: கசாப்புடன் ஒன்பது பேர் படகு மூலம் வந்தனர் என்று சாட்சிகள் தெரிவித்தனர்.
  2009, ஜூன் 2: மராத்தி மொழி தனக்கு தெரியும் என்று நீதிபதியிடம் கசாப் தகவல்.
  2009 ஜூன் 10: சி.எஸ்.டி., ரயில்வே ஸ்டேஷனில் கசாப்பை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம்.
  2009 ஜூன் 23: சிறப்பு கோர்ட்டில் , ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயித் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஷகி-உர்-ரஹ்மான் லக்வி உட்பட 22 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் சுமத்தப்பட்டன.
  2009 ஜூன் 25: அல்சரால், வயிற்று வலியால் அவதிப்படுவதாக கசாப் தகவல். கசாப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசார், அவரை அடித்தனரா என்று சந்தேகம். ஆனால், தான் இந்தியாவுக்கு வரும் முன்னே தனக்கு அல்சர் இருந்தாக கசாப் தகவல்.
  2010, ஜூலை 16: சி.எஸ்.டி., ரயில்வே ஸ்டேஷனில் கேமராவில் பதிவான, கசாப்பின் நடவடிக்கைகளை கோர்ட் பார்வையிட்டது.
  2010, ஜூலை 20: கசாப் தன் மீதான குற்றச்சாட்டுகள் (மறுத்த குற்றச்சாட்டுகள் உட்பட) அனைத்துக்கும் ஒப்புதல்.
  2009, ஆக., 12: இந்திய வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க எப்.பி.ஐ., அதிகாரிகள், தொழில்நுட்பம் தொடர்பாக கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர்.
  2009 டிச., 18: தான் ஒரு அப்பாவி என்றும், இந்திய போலீசார் தன்னை சித்திரவதை செய்ததாகவும் கசாப் தகவல். தாக்குதலுக்கு 20 நாட்களுக்கு முன், மும்பை வந்ததாகவும், சாதாரணமாக ஜுகு கடற்கரையில் சுற்றித் திரிந்தபோது போலீசார் தன்னை கைது செய்ததாகவும் கசாப் அந்தர்பல்டி வாக்குமூலம்.
  2010 ஜன., 25: சர்வதேச சிறப்பு கோர்ட்டில் தன்னை விசாரிக்க வேண்டும் என்று கசாப் வேண்டுகோள். இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
  2010 மார்ச் 31: மே 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தகிலியானி அறிவித்தார். கசாப் குற்றவாளி என நிரூபணம் ஆகியுள்ளதால், மரண தண்டனை வாய்ப்பும் உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

  ஒரு நாளைக்கு ரூ.8.5 லட்சம் : சிறையில் இருக்கும் பயங்கரவாதி கசாப்பை பராமரிக்க, ஒரு நாளைக்கு ரூ.8.5 லட்சம் செலவழிக்கப்பட்டு வருகிறது.மருத்துவம் மற்றும் சட்டப்பூர்வ பணிகளை மேற்கொள்ள அரசு, கசாப்புக்கு செலவழித்து வருகிறது. மருத்துவ உதவி தேவைப்படும் போது, அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க மும்பை ஜே.ஜே.மருத்துவமனையிலும் தனி செல் அமைக்கப்பட்டது.குண்டு துளைக்காத இந்த செல்லை அமைக்க ஒரு கோடி ரூபாய் ஆனது. கசாப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்தியப் பாதுகாப்பு படைக்கான செலவும் தனி.

 2. vedaprakash Says:

  மும்பை தாக்குதல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு : 2 பேர் விடுதலை
  மே 04,2010,00:00 IST
  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7412

  மும்பை :மும்பைத் தாக்குதல் வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. தாக்குதலின் போது கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப் குற்றவாளி என, சிறப்பு கோர்ட் நீதிபதி அறிவித்தார். அதே நேரத்தில், இந்த வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் விடுவிக்கப்பட்டனர். 166 பேர் பலியாக காரணமாக இருந்த இந்த வழக்கில் 1,522 பக்கங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கசாப்பிற்கான தண்டனை குறித்து இன்று வக்கீல்களின் வாதம் நடக்கிறது. பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில் மிக வேகமாக விசாரணை நடந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது இந்த வழக்கே ஆகும்.

  கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தானிலிருந்து வந்த 10 பயங்கரவாதிகள், மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில், வெளிநாட்டவர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில், ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் கைதானான். இவன், பாகிஸ்தானின் பரித்கோட் நகரைச் சேர்ந்தவன். பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டவன்.மேலும், இந்த பயங்கரவாதிகளுக்கு தாக்குதல் நடத்த உதவியதாக, இந்தியாவைச் சேர்ந்த பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த மூன்று பேருக்கும் எதிரான வழக்கு, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி தகிலியானி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பு வக்கீலாக உஜ்வால்நிகாம் ஆஜரானார்.

  இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் மிக வேகமாக முடிவுக்கு வந்த வழக்கு இதுவே. தவிரவும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., வந்து ஆஜரான வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வழக்கும் ஆகும். மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கசாப், குண்டுதுளைக்காத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தான். தீர்ப்பையொட்டி, மும்பை ஆர்தர்ரோடு சிறையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

  தீர்ப்பு: நீதிபதி தகிலியானி தீர்ப்பை வழங்கினார்.

  1,522 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் அவர் கூறியுள்ளதாவது:இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்ததாக, கசாப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என நிரூபணமாகியுள்ளது. அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளான். ஆயுதங்கள் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், வெடிமருந்துகள் சட்டம், ரயில்வே சட்டம் என, 86 சட்டப் பிரிவுகளின் கீழ் கசாப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அனைத்து சட்டப் பிரிவுகளின் கீழும் அவன் குற்றவாளியே.மும்பைத் தாக்குதலை வெறும் படுகொலை என சொல்ல முடியாது. இது இந்தியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட போரின் ஒரு பகுதி என்றே சொல்ல வேண்டும். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்து சிலர் இயக்கியுள்ளனர்.மூத்த போலீஸ் அதிகாரிகள் ஹேமந்த் கர்காரே, அசோக் காம்தே, விஜய் சலாஸ்கர், உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்பாலே ஆகியோரை கொன்ற வழக்கிலும் கசாப் குற்றவாளியே.

  அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்களான பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமானதாக இருப்பதால், சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக்கி விடுதலை செய்கிறேன்.இந்த வழக்கில், மீடியா போட்டோகிராபர்கள் செபஸ்டியன் டிசவுசா மற்றும் ஸ்ரீராம் வெர்னீகர் (கசாப் சுட்டதை படம் பிடித்தவர்கள்), சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய அறிவிப்பாளர் விஷ்ணு ஜெண்டே, 11 வயது சிறுமி தேவிகா ரோதவான் ஆகியோர் அளித்த சாட்சியங்கள் கோர்ட்டிற்கு மிகவும் உதவியாக இருந்தன. மேலும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், தலைமறைவு குற்றவாளிகள் என, குறிப்பிடப்பட்டுள்ள 35 பேரில், 20 பேர் குற்றவாளிகள் என்பதையும் கோர்ட் கண்டறிந்துள்ளது.இவ்வாறு நீதிபதி தகிலியானி கூறினார்.

  குற்றவாளி கசாப் என்று நீதிபதி அறிவித்த போது, அவன் ஏதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. ஆனால், மற்ற இருவரும் தண்டனையின்றி விடுவிக்கப்பட்ட போது, அவர்கள் புன்முறுவல் பூத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். கசாப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், அவனுக்கான தண்டனை குறித்து இன்று வக்கீல்களின் வாதம் நடக்கிறது. மரண தண்டனை வழங்க வேண்டும் என, அரசு தரப்பில் வாதிடப்படும் வாய்ப்பு அதிகம்.

  தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த அரசு சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், ”பாஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது விடுதலையை எதிர்த்து, ஐகோர்ட்டில் அப்பீல் செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்வேன். கசாப்பை குற்றவாளி என, அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: