முஸ்லிமும் பிரதமராகலாம்: ராகுல் காந்தி

முஸ்லிமும் பிரதமராகலாம்: ராகுல் காந்தி
First Published : 07 Dec 2009 03:37:14 PM IST
http://dinamani.com/edition/story.aspx?=165683&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

அலிகார், டிச. 7: ஒரு குறிப்பிட்ட பிரிவினரோ அல்லது மதத்தினரோதான் இந்தியாவின் பிரதமராக முடியும் என்பதில்லை. திறமை இருந்தால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரும் பிரதமராகலாம் என்றார் காங்கிரஸ் பொதுச்செயலரும் அமேதி தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸின் அமைப்புத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உடையவர்களுடன் ஆலோசனை நடத்தவும் மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கட்சி வளர்ச்சிப்பணிகளை மேற்பார்வையிடவும் இரு நாள் பயணத்தை திங்கள்கிழமை தொடக்கினார் ராகுல் காந்தி.

முதல் முறையாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு திங்கள்கிழமை வருகை புரிந்த அவர் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது மாணவர்களும் அரசியல் தொடர்பாக அவரிடம் கேள்விகளை கேட்டனர்.

ஒரு மாணவர் அவரைப்பார்த்து, நாடு சுதந்திரம் பெற்று எத்தனையோ ஆண்டுகள் €ஆனபிறகும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை பிரதமர் பதவியில் அமரமுடியவில்லையே என்று வேதனை பட தெரிவித்தார். அதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி கூறியதாவது:

எந்த மதத்தை சார்ந்தவர் அல்லது எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பார்த்து பிரதமர் பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்படுவதில்லை. திறமை இருந்தால் யாரும் எந்த பிரிவினரும் இந்த பதவிக்கு வரலாம். தம்மிடம் போதிய திறமை இருந்தால் முஸ்லிம்மதத்தைச் சேர்ந்தவரும் பிரதமர் பதவியில் அமரலாம்.

நமது பிரதமராக உள்ள மன்மோகன் சிங், சீக்கிய வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அந்த பதவி அவருக்கு கிடைத்ததா என்றால் இல்லை. அவரிடம் அசாத்திய திறமை உள்ளது. அதற்கான பரிசுதான் அவருக்கு அந்த பதவி.

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களில் எத்தனை பேர் அரசியலில் உள்ளனர். குறிப்பாக சொல்லப்போனால் இளைய தலைமுறையினர் அதில் ஈடுபாடு காட்டுவதாகவே தெரியவில்லை. எனவே முஸ்லிம் வகுப்பில் உள்ளவர்கள் அரசியலில் ஈடுபாடு காட்டவேண்டும். அரசியலில் பிரகாசிக்கவேண்டும்.

முஸ்லிம்-பிரதமராகலாம்-ராகுல்

சீக்கியர் ஒருவர் பிரதமராவார் என்று யாரும் கனவிலும் நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள். 100 கோடிக்கும் மேலானமக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் சீக்கியருக்கு அந்த பதவி கிடைத்துள்ளது. பரந்து விரிந்த நமது நாட்டில் மிக குறைந்த சதவீதத்தினரே சீக்கிய சமுதாய மக்கள்.

எனது முயற்சியெல்லாம் அரசியலில் எல்லா பிரிவினரையும்இணைக்கச் செய்வதே ஆகும். அதே போல் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அரசியலில் ஈடுபடவேண்டும்.

தேசிய அரசியலில் முஸ்லிம் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கவேண்டும். இதனால் முஸ்லிம் வகுப்பினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை களைவதுடன் நாட்டுக்கும் தொண்டுசெய்யலாம்.

இப்போதைய காலகட்டத்தில் தீவிரஅரசியலில் ஈடுபடும் இளைய தலைமுறை முஸ்லிம் தலைவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இந்த நிலை மாறவேண்டும் என்றார் ராகுல் காந்தி.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: