“பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது”!

தயாராக உள்ளது இந்தியா: சொல்கிறார் சிதம்பரம்
நவம்பர் 27,2009,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=15251

Latest indian and world political news informationபுதுடில்லி: “”பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள ஓர் ஆண்டுக்கு முன்பிருந்ததை விட தற்போது இந்தியா மிகச் சிறப்பான தயார் நிலையில் உள்ளது,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி ஹெட்லி முன்னர் அடிக்கடி இந்தியா வந்து சென்றுள்ளான். அதுபோல இப்போது வந்தால், அவன் பாதுகாப்பு வலையில் சிக்கிக் கொள்வான். மும்பை தாக்குதல் நடந்த பின், அவன் ஒருமுறை தான் இந்தியா வந்துள்ளான். அதற்கு முன்னர் எட்டு முறை வந்துள்ளான்.ஹெட்லியை இந்தியாவில் கைது செய்ய புலனாய்வுத் துறையினர் தவறி விட்டனர் எனக் கூறப்படுவது சரியல்ல. அவன் விவகாரம் முற்றிலும் மாறுபட்டது. அவன் இங்கு வந்திருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொள்ளவில்லை.

பாதுகாப்பு விஷயத்தில் நாம் ஒரு போதும் முழு திருப்தி அடைய முடியாது. ஒவ்வொரு நாளும் பாதுகாப்பை, அதற்கான திறனை நாம் மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். உளவு நிறுவனங்கள் தகவல் சேகரிப்பதும், அவற்றை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதும் தற்போது மேம்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையினர் பலப்படுத்தப்பட்டுள்ளனர். நான்கு நகரங்களில் அவற்றின் துணைப் பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

விமர்சனம்:

1. சிதம்பரம் உண்மையில் “ஜோக்” அடிக்கிறாரா அல்லது “சீரியஸா” பேசுகிறார என்றுத் தெரியவில்லை!

2. “பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள ஓர் ஆண்டுக்கு முன்பிருந்ததை விட தற்போது இந்தியா மிகச் சிறப்பான தயார் நிலையில் உள்ளது,” என்கிறார்! அதாவது, வாருங்கள், மறுபடியும் தாக்குங்கள் என்கிறாரா?

3. அதாவது, 26/11/2008ல் சிவராஜ் பாட்டில் ஒரே நாளில் மூன்றுமுறை உடைமாற்றி வேஷம் போட்டார். ஆனால் 26/11/2009ல் நான் வேட்டி, சட்டை, துண்டு போட்டே ஜாலியாக உள்ளேன் என்கிறார் போலும்!

4. ஒரே வருடத்தில் முஹ்ஹ்ம்மது கஸாபிற்கு ரூ.35/- கோடி செலமாம்! ஆனால் செத்தவர்களுக்கு இன்னும் பணம் கொடுக்கவில்லை என்று அழுகிறார்கள்!

5. நூற்றுக் கணக்கான பெண்களின் தாலியறுத்தவனுக்கு பிரியாணி, சென்டு, நடப்பதற்கு வராண்டா இத்யாதி கேட்டானாம். ஆனால், ஏxஐ பெண்களுக்கு லட்சங்கள் தருகிறோம் என்று போட்டிப் போட்டிக் கொண்டு வந்தவர்கள் ரூ.30 முதல் 50 ஆயிரங்கள் கொடுத்து அமைதியாக உள்ளார்களாம்.

6.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: