நிகழ்ச்சி ஒன்று-கருத்து மூன்று!

நிகழ்ச்சி ஒன்று-கருத்து மூன்று!

ஆஸ்மி மீதான தாக்குதல்: கல்யாண்சிங் காட்டம்
நவம்பர் 11,2009,00:00  IST

Latest indian and world political news informationபுதுடில்லி: சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி மீது நடத்தப்பட்ட தாக்குதல், தலிபான்களின் பயங்கரவாதத்துக்குச் சமம் என்று, உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் எம்.பி.,யுமான கல்யாண்சிங் மகாராஷ்டிர சட்டசபையில், சமாஜ்வாடி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கூறியதாவது: இந்த நாள்  இந்திய அரசியல் வரலாற்றில் கறுப்பு நாள். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.,) எம்.எல்.ஏ.,க்களின் இந்த செயலுக்கும், தலிபான்களின் பயங்கரவாத செயலுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை.

சம்பந்தப்பட்டவர்களை  சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. தாக்கியவர்கள் மீதும் ராஜ்தாக்கரே மீதும் ராஜத்துரோக வழக்கு போடப்பட வேண்டும். ஆஸ்மி முகத்தில் விழுந்த அடி, இந்த நாட்டின் தேசிய மொழி, ஒற்றுமை இவற்றின் மீது விழுந்த அடி. இந்தியில்தான் உறுதிமொழி எடுப்பேன் என்ற ஆஸ்மியின் உறுதியை நான் பாராட்டுகிறேன். அவர் உண்மையான தேசிய வாதியாக செயல்பட்டிருக்கிறார். வந்தே மாதரம்  பாடலை யாரும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அது பிரிட்டிஷாரை எதிர்த்து சுதந்திரத்துக்காகப் பாடப்பட்ட பாடல். இவ்வாறு கல்யாண்சிங் தெரிவித்தார்.

பாஜகவிலிருந்து, சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்துள்ள இவர் குஊறுவது வேடிக்கைதான். முன்னர், இவர் அந்த கட்சியில் சேர்த்துக் கொண்டதற்கே, ஒரு முஸ்லீம் தலைவர், கட்சியை சதாய்த்துவிட்டார்!

ஆஸ்மி தாக்குதல் சம்பவம்: நாடகம் என்கிறார் தாக்கரே
நவம்பர் 11,2009,00:00  IST

Latest indian and world political news informationமும்பை: “”மகாராஷ்டிரா சட்டசபையில் அபு ஆஸ்மி தாக்கப்பட்ட சம்பவம் அவரும், காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்து நடத்திய நாடகம்,” என, சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார். சிவசேனா கட்சியின் பத்திரிகையான, “சாம்னா’வில் பால்தாக்கரே  எழுதியுள்ளதாவது: மராத்தியில் பதவியேற்பதற்கு பதிலாக வேண்டுமென்றே இந்தியில் பதவியேற்று, பிரச்னையை வரவழைத்துள்ளார் அபு ஆஸ்மி. இதன்மூலம் விளம்பரம் தேட முற்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பணக்கார அரசியல்வாதிகளில், அபு ஆஸ்மியும் ஒருவர். 200 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி. இந்த சொத்தை எல்லாம் அவர் மகாராஷ்டிராவில்தான் சம்பாதித்துள்ளார். அப்படி சம்பாதித்தவர் ஏன் மராத்தி மொழி கற்றுக் கொள்ளக் கூடாது.

ஆஸ்மி தாக்கப்பட்ட சம்பவம், அவரும் காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்து நடத்திய நாடகம். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் தனது பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டுள்ளது. ஆஸ்மி தாக்கப்பட்ட போது, அதை  தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளது. அபு ஆஸ்மியை மட்டும் தாக்கிய ராஜ்தாக்கரே கட்சியினர், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதவியேற்ற மற்ற எம்.எல்.ஏ.,க்களை விட்டு விட்டனர். இது அவர்களின் இரட்டை அணுகுமுறையை காட்டுகிறது. சட்டசபையில் வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல. சட்டசபை நடவடிக்கைகள் விதிமுறைகளின்படியே நடத்தப்பட வேண்டும். அது காய்கறி சந்தையாக மாறி விடக்கூடாது. மராத்தியின் பெருமையை காக்க வேண்டும் என்பதே சிவசேனாவின் தத்துவம். அது எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு பால்தாக்கரே கூறியுள்ளார்.

ஆமாம், எப்படி காங்கிரஸ்காரர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்?எல்லாம் “வந்தே மாதரம்” மீது ஃபதவா போட்டமாதிரிதான். சிதம்பரம் சொல்லிவிட்டாரே நான் அப்பொழுது அங்கு இல்லை என்று!

எம்.எல்.ஏ.,க்கு அடி, உதை: சோம்நாத் சட்டர்ஜி அதிர்ச்சி
நவம்பர் 11,2009,00:00  IST

Latest indian and world political news informationபுதுடில்லி: மகாராஷ்டிர சட்டசபையில், எம்.எல்.ஏ., தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, “”மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சட்டசபை மற்றும் பார்லிமென்டில், மக்கள் பிரதிநிதிகள் தாக்கப்படும் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும் எனில், மக்களுக்கு அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை வழங்க வேண்டும். மகாராஷ்டிர சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே எம்.எல்.ஏ.,க்கள், நான்கு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் இதற்கு முன் நடந்திராத ஒன்று. இருப்பினும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது நேரும் போது, இது அவசியமாகிறது.

மக்கள் பிரதிநிதிகளை தாக்கும் செயலில் ஈடுபடும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மேலும், எம்.எல்.ஏ.,க்களே இதுபோன்ற செயலில் ஈடுபடும் போது, அது ஜனநாயகத்திற்கு சீரழிவை ஏற்படுத்தி விடும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், எதிர்காலத்தில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை அறிமுகப்படுத்த வேண்டும் என, நான் நீண்ட நாட்களாக கோரி வருகிறேன். ஆனாலும், இதுவரை அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இவ்வாறு சட்டர்ஜி கூறினார். இதற்கிடையில், “”மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேரையும் சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவு சரியானதே,” என காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி., கிஷோர் சந்திர தேவ் கூறியுள்ளார்.

பாவம், இவரின் கதை ஆந்தை மாதிரியாகிவிட்டது! பறவைகளும் ஏற்றுக் கொள்ளவில்லை (கம்யூனிஸ்டுகள்), விலங்குகளும் மறுத்துவிட்டன (காங்கிரஸ்காரர்கள்)! தொங்கிக் கொண்டிருக்கிரார், யாதாவது / என்ன கிடைக்கும் என்று!

உண்மையிலேயே “செக்யூலரிஸம்” கட்சிகளை, இத்தகைய தலைவர்களையும் என்ன்மெல்லாம் செய்கிறது பாருங்கள்!

Advertisements

ஒரு பதில் to “நிகழ்ச்சி ஒன்று-கருத்து மூன்று!”

 1. vedaprakash Says:

  ஆஸ்மி நடந்த விதம் குறித்து விசாரணை : மகாராஷ்டிர சட்டசபை உத்தரவு
  நவம்பர் 12,2009,00:00 IST
  http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14941

  மும்பை : சமாஜ்வாடி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மியை கைது செய்ய வேண்டுமென, சிவசேனா மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்ததால், மகாராஷ்டிர சட்டசபையில் நேற்று கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அதே நேரத்தில், சட்டசபையில் அபு ஆஸ்மி நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்த, சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் உத்தரவிட்டார்.

  மகாராஷ்டிர சட்டசபையின் கூட்டத்தொடர் கடந்த திங்களன்று துவங்கிய போது, சமாஜ்வாடி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி, இந்தி மொழியில் பதவியேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அவரை தாக்கினர். இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்த சம்பவத்திற்கு நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய அபு ஆஸ்மி, “பால் தாக்கரேக்கு வயதாகிவிட்டது; அவர் குழந்தை போல பேசுகிறார்’ என்றார்.

  இதனால் எரிச்சலடைந்த சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நேற்று சட்டசபைக்கு வெளியே அபு ஆஸ்மியை கெரோ செய்தனர். ஆனால், ஆஸ்மியோ, “தான் அப்படிப்பட்ட கருத்து எதையும் தெரிவிக்கவில்லை’ என்று மறுத்தார்.

  இந்நிலையில் இந்த விவகாரம், நேற்று மகாராஷ்டிர சட்டசபையிலும் எதிரொலித்தது. சபை கூடியதும் அபு ஆஸ்மியை கைது செய்ய வேண்டும் என, சிவசேனா மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கோஷமிட்டனர். இந்த விவகாரத்தினால், சபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. “எதிர்க்கட்சியினரின் கோபத்தை தூண்டும் வகையில் அபு ஆஸ்மி பேசியுள்ளார்; பால் தாக்கரேயை இழிவுபடுத்தியுள்ளார். அதனால், சபையில் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்றும் எதிர்க்கட்சியினர் கோரினர்.

  இதையடுத்து, தற்காலிக சபாநாயகர் கணபதிராவ் தேஷ்முக், “”சட்டசபையில் அபு ஆஸ்மி நடந்து கொண்ட விதம் குறித்து, சபையின் முதன்மை செயலர் விரிவான விசாரணை நடத்துவார். விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பார்,” என்றார்.

  சபாநாயகராக திலீப் வால்சே தேர்வு : மகாராஷ்டிர சட்டசபையின் புதிய சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திலீப் வால்சே பாட்டீல் தேர்வு செய்யப்பட்டார். சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சியினருக்கு வழங்க வேண்டுமென, சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதை ஏற்க காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி மறுத்து விட்டது. உடன், பா.ஜ., சார்பில் கிரிஷ் பாபட் என்பவர் சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்பட்டார். இருந்தாலும், பாபட் தன் மனுவை நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டதால், சபாநாயகராக திலீப் வால்சே பாட்டீல் ஏக மனதாக தேர்ந் தெடுக்கப்பட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: