Archive for the ‘யானிவ் பென் நைய்யம்’ Category

கோவாவிலிருந்து மறைந்த சர்வதேச போதை குற்றவாளி இத்தாலியில் இருக்கிரானாம்!

செப்ரெம்பர் 28, 2010

கோவாவிலிருந்து மறைந்த சர்வதேச போதை குற்றவாளி இத்தாலியில் இருக்கிரானாம்!

இந்தியாவில் இத்தாலிய போதை வியாபாரி: அடால என்கின்ற யானிவ் பென் நைய்யம் கோவாவில் பெரிய இத்தாலிய போதை மருந்து வியாபாரி. ஆனால், இவனுக்கோ, பல போலீஸாரும், அரசியல்வாதிகளும் துணையாக இருக்கின்றார்கள். இத்தாலில் உள்ளவர்களுக்கெல்லாம், இதெல்லாம் சகஜமான வேலைதான். அங்கு மாஃபியா என்று குடும்பங்களாக இத்தாலியர்கள் பல தலைமுறைகளகாக, பற்பல குற்றங்களில் ஈடுபட்டு வருவர். அடாலவின் காதலி யூ-ட்யூபில் எப்படி அவன் தன்னைப் பற்றி பீய்த்துக் கொண்டு பேசினான் என்பது பற்றி வீடியோ எடுத்து போட்டுள்ளாள். இதைப் பார்த்துதான், நம்மாட்களுக்கு விஷயமே தெரிய வந்ததாம். பழக்கமான போலீஸாரும், அரசியல்வாதிகளும் கதிகலக்கத்தில் உள்ளனர். இவன் திடீரென்று கோவாவிலிருந்து மறைந்து விட்டான். கடைசியாக கோவாவில் 09-07-2010 அன்று பார்க்கப்பட்டான். உடனே, போலீஸ் “சிவப்புநிற எச்சரிக்கை” அலார நோட்டீஸை[1] 03-09-2010 அன்று அறிவித்துள்ளனர்[2]. அதாவது, அந்த அளவிற்கு சுருசுருப்பாக உள்ளார்கள்!

போதை மருந்து வியாபாரிகள்-போலீஸார்-அரசியல்வாதிகள் தொடர்பு: கடந்த மார்ச் 2010ல் போதை மருந்து வீயாபாரத்தில் போதை மருந்து வியாபாரிகள்-போலீஸார்-அரசியல்வாதிகள் தொடர்பு என்ற நிலையில் ஏழு போலீஸார் கைது செய்யப்பட்டனர். மும்பை நீதிமனேஅத்தில் வழக்கு தொடர்ந்து, சி.பி.ஐக்கு வழக்கு மாற்றப்படவேண்டும், விசாரிக்கப்பட வேண்டும் என்றபோது, கோவாவின் உள்துறை அமைச்சர் ரவி நாயக் அதனை தடுத்தார். ஏனெனில் இவரது மகனுக்கும், போதைமருந்து வியாபாரத்திற்கும் தொடர்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது[3]. கோர்ட்டே, இந்த விஷயத்தில் நொந்து போய் வெளிப்படையாகவே தொடர்பு உள்ளது என்று சொல்லிவிட்டது[4].

இந்தியாவிற்கு யார் வேண்டுமானாலும், வரலாம்-போகலாம்: மறைந்த அவன் இத்தாலியில் தோன்றியுள்ளான் (25-09-2010). அதாவது, ஜாக்கித்தையாக, இந்தியாவிலிருந்து யாருக்கும் தெரியாமல், தனது ஊருக்கு விமானம் ஏறி ஜாலியாக சென்றுள்ளான்[5]. அதாவது எப்படி, எங்கு விமானத்தில் ஏறினான், அவன் எப்படி டிக்கெட் வாங்கினான் அல்லது வாங்கிக் கொடுத்தார்கள், பணம் எங்கிருந்து வந்தது, விமான நிலையங்களில் (இந்தியா மற்றும் இத்தாலி) எப்படி இவனை யாரும் கண்டு கொள்ளவில்லை, முதலிய விஷயங்கள் புதிர்களாக உள்ளன[6]. முன்பு, சோனியா மெய்னோ ஹோசூரில் கைதான, செவன்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச் பாதிரி இந்தியாவிலிருந்து வெளியேற நேரிடையாக தலையிட்டு உதவி செய்துள்ளது ஞாபகத்தில் வருகிறது. இந்தியா இந்த லட்சணலத்தில் உள்ளது. அவன் டெல் அவிவ் தலைநகரித்திலிருந்து சில கி.மீ தூரத்திலுள்ள தனது சொந்த ஊரான ரிஷான் லெ ஜியான் என்று ஊரில் அவனது நண்பர்களால் பார்க்கப்பட்டுள்ளான் (Atala, said he was last seen near his home in Rishon LeZion, a town located a few kilometres from capital Tel Aviv.).

கோவாவிலிருந்து தப்பிச் சென்றதற்கும், போலீஸருக்கும் எந்த தொடர்பும் இல்லை. கோவாவின் உள்துறை அமைச்சர் ரவி நாயக் என்பவர். இவரிடைய மகனுக்கும் அந்த போதை மருந்து வியாபாரிக்கும் தொடர்பு உள்ளது. இந்நிலையில், அடால என்கின்ற யானிவ் பென் நைய்யம் கோவாவிலிருந்து தப்பிச் சென்றதற்கும், போலீஸருக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையை சொல்வாதானால், அவன் போலீஸ் கஸ்டடியிலேயே இல்லை என்று கூறுகிறார்[7]. அவன் திரும்ப கோவாவிற்கு வருவான் என்றும் கூறுகிறார். அவ்வளவு நம்பிக்கை. ஆனால், 21-07-2010 அன்ரு அவனுக்கு பிணையில் பெயில் கொடுக்கப்பட்டுள்ளது[8]. அப்பொழுது அவன் சொல்கிறான், “நான் மற்ற அயல்நாட்டு சுற்றுலாப்பயணி போன்று போதை மருந்து போட்டுக் கொள்வேன், ஆனால் மற்றவர்கள் சொல்வதைப் போல விற்கின்ற ஆள் கிடையாது” (‘I just used to take drugs like any other tourist. I am not a drug dealer like the police have been calling me,’ Atala told reporters[9].).

தீவிரவாதிகளின் தொடர்பு[10]: குஜராத்தையடுத்த மஹாராஷ்டிரத்தின் கடற்கரை இவ்வளது சுலபமாக நுழைவதற்கு ஏற்றமுறையில் உள்ளது[11] தீவிரவாதிகள் எளிதாக உள்ளே நுழையத்தான் வாய்ப்பாக உள்ளது[12]. இந்த போதைமருந்து வியாபாரிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் கூட தொடர்பு உள்ளது, அரசிற்கு தெரிந்தேயுள்ளது[13]. ஆனால், சிறுபான்மையினர் / முஸ்லீம்கள், இத்தாலியர்கள் / சோனியா நாட்டுக்காரர்கள் என்றுதான், மனதிற்குள் உண்மையான போலீஸ்காரர், அதிகாரி நினைத்துக் கொண்டு வேலை செய்யவேண்டியுள்ளது. மேலும், இவ்வாறு கோர்ட்டே நொந்து போகின்ற அளவிற்கு அரசியல் தலையீடும் உள்ளது.


[1] சர்வதேச விதிகளின்படி, போதை மருந்தில் சம்பந்தப்பட்டுள்ள எந்த ஆள் தப்பித்துச் சென்றாலும், உடனடியாக தெரிவிக்கப்படவேண்டும். ஆனால், நம்ம ஆட்கள் எப்படி உதவி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

[2] http://www.thaindian.com/newsportal/uncategorized/red-corner-notice-against-israeli-drug-dealer_100423329.html

[3] http://www.thaindian.com/newsportal/politics/goa-police-contradict-home-ministers-comments-on-israeli-drug-dealer-lead_100418105.html

[4] http://www.thaindian.com/newsportal/uncategorized/court-hints-at-political-patronage-in-police-drug-nexus_100374734.html

[5] http://www.thaindian.com/newsportal/uncategorized/absconding-israeli-drug-dealer-is-back-home_100434976.html

[6] தமிழ்நாட்டிலும், குறிப்பாக மஹாபலிபுரத்தில் எப்படி, அகில உலக போதை மருந்து கடத்தல், செக்ஸ் மற்ற குற்றவாளிகள் ஜாலியாக வந்து தங்குகிறார்கள், செல்கிறார்கள் என்பவற்றை இன்னொரு இடத்தில் பதிவு செய்துள்ளேன்.

[7] http://www.thaindian.com/newsportal/politics/no-police-lapse-in-drug-dealers-disappearance-goa-minister_100417980.html

[8] http://topinews.com/mainstream/2010/06/22/israeli-drug-dealer-gets-conditional-bail/902/

[9] http://topinews.com/mainstream/2010/06/23/took-drugs-but-never-sold-them-israeli-pusher/1269/

[10] http://www.dnaindia.com/india/report_goa-drug-nexus-may-be-linked-to-terrorism-ncp_1426796

[11] இந்நிலையில், குஜராத்தைத் தொடர்ந்து விமர்சித்து வருவதை நோக்கவும். ஆனால், இப்படி காங்கிரஸ்காரர்களே, அனைத்துல குற்றக்களில் ஈடுபட்டுள்ளபோது, அதனை மறைக்கப் பார்க்கின்றனர். முன்னர் ராஜிவ் காந்தி ரீகனை சந்தித்தபோது, முகமது யூனீஸ் என்பவரின் மகன் அமெரிக்க சிறையில் போதை மருந்து கடத்தல் விஷயமாக தண்டனை பெற்று சிறையில் இருந்திருக்கிறான். செக்யூலரிஸ சித்தாந்தத்தின்படி, முஸ்லீமுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, அவனை விடுதலை செய்ய கோரியபோது, அமெரிக்கா நன்றாக டோஸ் கொடுத்ததும் வாங்கிக் கொண்டு வந்தாராம்!

[12] 26/11 தீவிரவாதிகள் அவ்வாறுதான் வந்துள்ளார்கள், இருப்பினும், அவர்களுக்கு – மஹாராஷ்ட்ர ஆட்களுக்கு அறிவில்லை போலும்!

[13] http://www.philly.com/philly/news/homepage/20091213_Terror_suspect_was_drug_dealer__then_informant.html?page=2&c=y